இப்டியெல்லாம் 'பண்ணாதீங்க' நல்லால்ல... நடுக்கடலில் பாட்டில்களால் 'பயங்கரமாக' தாக்கிக்கொண்ட மீனவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன்பிடித்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு சென்ற வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் பைபர் படகில் சென்று அந்த படகை வழிமறித்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதற்கு கீச்சாங்குப்பம் மீனவர்கள் மறுப்பு தெரிவித்து, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாக்குவாதம் முற்றி இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கிக் கொண்டனர். இந்த பயங்கர மோதலில் 17 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் தற்போது நாகை துறைமுகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
