'கொரோனா வந்து இவங்க செத்தா பரவாயில்ல'... 'அரசாங்கம் எடுத்த முடிவு'?... அதிரவைக்கும் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 16, 2020 01:20 PM

கொரோனா பாதித்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என, இத்தாலி அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus may force healthier patients are Prioritized

இத்தாலியில் கொரோனாவின் பாதிப்பு தற்போது வேகமாக பரவி வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இத்தாலியில் 5.090 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகப்படியான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 80 வயதிற்கு மேற்பட்டோரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டாம் என இத்தாலி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான உத்தரவு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அறிவியல் குழுவின் ஒப்புதலுக்கு பிறகு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. இது அங்குள்ள முதியோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONAVIRUS #ELDERLY PATIENTS #ITALY #DIE