400 கிமீ தூரம்.. மனைவியின் உடலை சூட்கேசில் கொண்டு போன மருத்துவர்.. பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரச் சேர்ந்தவர் அபிஷேக். மருத்துவரான இவரது மனைவியின் பெயர் வந்தனா அவாஸ்தி. இவர் ஒரு ஆயுர்வேத டாக்டர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | அன்னைக்கி டீக்கடையில் வேலை, இன்னைக்கி 'IAS' அதிகாரி.. கொஞ்சம் கொஞ்சமா போராடி சாதிச்சு காட்டிய நபர்.. சபாஷ்!!
சீதாப்பூர் சாலையில் சொந்தமாகவே ஆஸ்பத்திரி ஒன்றை இவர்கள் நிர்வகித்து வருவதாக தெரியும் நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி தனது மனைவியை காணவில்லை என்றும் மருத்துவரான அபிஷேக் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், அவரது வீட்டில் இருந்து சில விலை உயர்ந்த பொருட்களையும் காணாமல் போனது பற்றி புகாரில் அபிஷேக் குறிப்பிட்டிருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது நடந்த விசாரணையில் வந்தனா மற்றும் அபிஷேக் ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அபிஷேக் மீது சந்தேகம் எழவே, அவருக்கு தெரியாமல் அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்ததாக சொல்லப்படுகிறது. இதில் அபிஷேக் மீது சந்தேகம் வலுக்கவே, அவரிடம் போலீசார் விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறிய தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அபிஷேக் மற்றும் வந்தனா ஆகியோரிடையே வழக்கம் போல அன்றைய தினம் தகராறு உருவானதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் ஆத்திரத்தில் இருந்த அபிஷேக், அவரது மனைவியை அடித்துள்ள நிலையில் இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மனைவி உயிரிழந்து போனதால் அதிர்ச்சி அடைந்த அபிஷேக், அவரது உடலை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு கொண்டு சென்று வந்தனா உடலை தீ வைத்து அபிஷேக் எரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
தனது மருத்துவமனைக்கு சூட்கேசில் வைத்து வந்தனா உடலை கொண்டு சென்ற அபிஷேக், ஆம்பலன்ஸ் உதவியுடன் 400 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் தன் மனைவி விபத்தில் இறந்து விட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாகவும் கூறி உள்ளார்.
மேலும், வந்தனாவின் கொலைக்கு அபிஷேக்கின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.