TV பார்க்கும் போது முன்னாள் காதலருடன் வந்த சண்டை?.. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் செய்த பதற வைக்கும் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் வீடியோ எடிட்டிங் படித்து முடித்து விட்டு பணிபுரிந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக சென்னையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் சூர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் நாளடைவில் காதலாகவும் மாற, இருவரும் சில காலங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் உருவானதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி இருக்கையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து, கொடைக்கானலில் சூர்யா தங்கி வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஸ்வேதாவும் கொடைக்கானல் வந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில், சூர்யா தங்கி இருந்த வீட்டிற்கு ஒரு சில நாட்கள் முன்பாக ஸ்வேதா வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருவரும் இரவு நேரத்தில் டிவி பார்த்து கொண்டிருந்ததாக சொல்லப்படும் நிலையில், அப்போது டிவி பார்ப்பது தொடர்பாகவும் வெவ்வேறு விஷயங்கள் வைத்தும் சூர்யா மற்றும் ஸ்வேதா ஆகியோரிடையே சண்டை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தனது ஆண் நண்பர்கள் நான்கு பேரை அங்கே ஸ்வேதா அழைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது, சூர்யா படியில் இருந்து விழுந்த்து விட்டதாக அவரை ஸ்வேதா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே சூர்யா உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருந்தது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், அவரது ஆண் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து சூர்யாவை ஸ்வேதா கொலை செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தங்களுக்குள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சூர்யாவை ஸ்வேதாவின் ஆண் நண்பர்கள் தாக்கியதன் காரணமாக உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஸ்வேதா ,மற்றும் அவரது ஆண் நண்பர்களான கெளதம், சுபாஷ், அகில், சோனா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். டிவி பார்த்ததன் பெயரில் இருவருக்கும் இடையே தகராறு உருவாகி இளைஞர் இறந்து போன சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | 3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர்.. நள்ளிரவில் இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரம். !

மற்ற செய்திகள்
