"இதுக்கு மேலயும் சரிப்பட்டு வராது".. சண்டை போட்டு தாய் வீட்டுக்கு போன மனைவியை கூப்பிட போன கணவர் .. கூடவே போட்டு வெச்ச அதிர்ச்சி பிளான்?!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூத்தாம்பட்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் தேவி. ராஜசேகர் - தேவி தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "8 வயசுல இப்டி ஒரு உலக சாதனையா?".. வேற லெவலில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு சிறுவன்!!
இதனிடையே மாத்தினிபட்டி என்னும் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்ணுக்கும் ராஜசேகருக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சரோஜா தனது கணவரை இழந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், தனது கணவர் ராஜசேகரின் தொடர்பு குறித்து மனைவி தேவிக்கு தெரிய வர கணவரை கண்டிக்கவும் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல், சரோஜாவுடனான உறவை கைவிடுமாறும் பலமுறை தேவி வலியுறுத்தி வந்துள்ளார். அப்படி இருந்த போதும் தனது மனைவியின் பேச்சைக் கேட்காமல் இருந்த ராஜசேகர் தொடர்ந்து சரோஜாவுடன் பழகி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் அடிக்கடி ராஜசேகர் மற்றும் தேவி ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து பிரச்சனையும் அதிகரித்துக் கொண்டே போனதால், தனது மூன்று மகன்களை அழைத்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கும் தேவி சென்று விட்டார். தாய் வீட்டுக்கு சென்ற தனது மனைவியை பலமுறை திரும்பவும் வீட்டிற்கு அழைத்தபடி இருந்துள்ளார் ராஜசேகர். ஆனாலும் ராஜசேகர் வீட்டிற்கு தேவி செல்லவில்லை என கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் அரண்மனையூருக்கு சென்று தனது மனைவி தேவியை அழைத்து வர போயுள்ளார் ராஜசேகர். அப்போது அங்கே குழந்தைகள் 3 பேரும் தூங்கிக் கொண்டிருக்க, மனைவி தேவியின் தாயாரும் தோட்ட வேலைக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், ராஜசேகர் மற்றும் தேவி ஆகியோரிடையே மீண்டும் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த ராஜசேகர், மனைவியை அடித்ததுடன் அவரை கொலை செய்துள்ளதாகவும் தகவல் கூறுகின்றது. மனைவி தேவியை கொலை செய்துவிட்டு சரோஜாவுடன் ராஜசேகர் தலைமறைவாகி உள்ளார்.
தேவியின் கொலை சம்பவம் தொடர்பாக ஏரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், ராஜசேகர் மற்றும் சரோஜா ஆகியோர் திருச்சியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கே சென்று இருவரையும் போலீசார் கைது செய்து வந்தனர்.
இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முதற்கட்ட விசாரணையில், சரோஜா உடனான உறவுக்கு மனைவி இடையூறாக இருப்பார் என்றும் அதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என சரோஜா கேட்டுக் கொண்டதால் கொலை செய்ததாகவும் ராஜசேகர் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | 38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த உலகின் பெரிய எரிமலை.. இனிமே என்ன நடக்கும்?.. எச்சரிக்கை பின்னணி!!

மற்ற செய்திகள்
