RACHITHA : “இன்னும் 3 வருஷம்தான்.. அந்த ஒரு விஷயத்துக்கு..”.. குழந்தைகள் பற்றி பிக்பாஸில் ரச்சிதா உருக்கம்.! BIGG BOSS 6

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Dec 15, 2022 12:30 PM

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Rachitha first time talks about her Babies in bigg boss 6 tamil

Also Read | அன்னைக்கி டீக்கடையில் வேலை, இன்னைக்கி 'IAS' அதிகாரி.. கொஞ்சம் கொஞ்சமா போராடி சாதிச்சு காட்டிய நபர்.. சபாஷ்!!

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் குழந்தை வளர்ப்பு பற்றி உருக்கமாக பேசிய ரச்சிதா கண்கலங்கியுள்ளார்.

Rachitha first time talks about her Babies in bigg boss 6 tamil

விஜய் டிவி சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ரச்சிதா, பிக்பாஸ் வீட்டில் 60ன் நாட்களுக்கு மேலாக விளையாடி வருகிறார். தற்போது பிக்பாஸ் வீட்டில் தேவதைகள், சாத்தான்கள் அல்லது சொர்க்கவாசிகள் - நரகவாசிகள் டாஸ்க் நடந்துவருகிறது.

Rachitha first time talks about her Babies in bigg boss 6 tamil

‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ என்கிற இந்த வார டாஸ்க்கின்படி, எது சொர்க்கம், எது நரகம், யார் நல்லவர், எவர் கெட்டவர், நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு போவதற்கான குறுக்கு வழி எது என கண்டுபிடித்து சென்றால்? அப்படி செல்ல ஒரு குறுக்கு வழி இருந்து, அதன் வழியே சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்தால்?.. எப்படி இருக்கும் என்பதே இந்த டாஸ்க். இதிலும் வழக்கம்போல, சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளேயும் நரகவாசிகள் கார்டன் ஏரியாவின் கூண்டிலும் அடைக்கப்படுவார்கள். ஆக, நரகவாசிகள் கொடுக்கப்படும் நேரத்திற்கு சைக்கிள் ஓட்டி உழைத்து களைத்து, சொர்க்கத்திற்கு நேர்வழியில் போகலாம். அது முடியாவிட்டால்,  அடைக்கப்பட்ட கூண்டில் இருந்து தப்பி, சொர்க்கத்துக்கான பாதை வழியே ஓடலாம். அதேசமயம் சிக்குனா சிதைச்சுருவாங்க.. தண்டனைகள் அவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதையும் அவர்கள் மனதிற்கொள்ளவேண்டும்.

Rachitha first time talks about her Babies in bigg boss 6 tamil

இதில் ஏஞ்சல் வேடத்தில் அமர்ந்திருக்கும் ரச்சிதா விக்ரமனிடம் பேசும்போது, “என்னுடைய உள் மனதில் ஒரு ஆசை இருக்கிறது. என்னுடைய 35வது வயதில் ஒரு குழந்தையை நான் தத்தெடுத்து வளர்ப்பேன். ஆனால் அந்த வயதுவரை நான் காத்திருப்பதற்கு ஏனென்றால், அக்குழந்தையை நான் சூப்பராக பார்த்துக்கொள்வேன் என்கிற கான்ஃபிடண்ட் வரும்போது நான் அதை கண்டிப்பாக செய்வேன். அது என்னுடைய உள் மனது ஆசை.

Rachitha first time talks about her Babies in bigg boss 6 tamil

எனக்கு பெண் குழந்தை மிகவும் பிடிக்கும். முதல் ஆப்ஷன் பெண் தான், ஆனால் அந்த பெண் குழந்தைக்கு துணை வேண்டும் என தோன்றினால், நான் ஆண் குழந்தையையும் வளர்ப்பேன்,  இன்னும் 3 வருஷம்தான் இருக்கு..அந்த ஒரு விஷயத்துக்கு!” என உருக்கமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.

Rachitha first time talks about her Babies in bigg boss 6 tamil

Also Read | "தம்பி நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்குக்கே Tough கொடுத்த மாணவர்.. மஸ்க்கின் அதிரடி..!

Tags : #BIGG BOSS 6 #BIGG BOSS 6 TAMIL #RACHITHA OPENS UP ABOUT BABIES #RACHITHA MAHALAKSHMKI #RACHITHA ABOUT BABIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rachitha first time talks about her Babies in bigg boss 6 tamil | Tamil Nadu News.