1 லட்ச ரூபாய் டீல் பேசி கணவருக்கு ஸ்கெட்ச்.. காதலன் போட்டு குடுத்த பிளான்... வசமாக சிக்கிய மனைவி!!.. திடுக்கிடும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசில தினங்களுக்கு முன் அழுகிய நிலையில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இறப்புக்கு பின்னுள்ள காரணம் திடுக்கிட வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம், நந்தகுடி என்னும் பகுதியில் அமைந்துள்ள குவாரி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது உயிரிழந்த நபரின் பெயர் ஆனந்தா என்பதும் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. லாரி டிரைவரான ஆனந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சைத்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், பக்கத்து வீட்டை சேர்ந்த சலபதி என்ற நபருடன் சைத்ராவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயம் கணவர் ஆனந்தாவுக்கு தெரிய வர, அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மனைவியை திட்டி அடித்ததாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றை சைத்ரா கொடுத்துள்ளார்.
பின்னர் இருவரையும் அழைத்த போலீசார் அவர்களை விசாரித்து கண்டித்ததுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர். அப்படி இருந்த போதும் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் சலபதியுடன் சைத்ரா பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட கணவன் ஆனந்தா, கோபத்தில் குடித்துவிட்டு மனைவியை அடிக்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் தான் ஆனந்தாவை ஒன்றாக கொலை செய்து விடலாம் என்றும் சலபதியுடன் சேர்ந்து சரித்ரா திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்காக திட்டம் போட்டு கூலிப்படையும் அணுகி உள்ளவர்கள், சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து ஆனந்தாவை கொலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனந்தாவின் உடல் கிடைத்தது தொடர்பாக போலீசார் நடத்தி வந்த விசாரணையில் உண்மைகள் வெளிவந்த நிலையில் சைத்ரா, சலபதி மற்றும் கொலைக்கு காரணமாக இருந்த சிலரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
