கணவருக்கு ஸ்லோ பாய்சன்??.. மாமியார் மரணத்திலும் விலகாத மர்மம்?!.. மனைவி போட்ட கொடூர பிளான்!!.. கதிகலங்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 05, 2022 05:58 PM

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்தவர் கமல்காந்த் ஷா. தொழிலதிபரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று திடீரென உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Woman slow poison to her husband plan with lover

ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்காந்த்தின் உடல் உறுப்புகள், மெல்ல மெல்ல செயலிழக்க தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்து போனார்.

அப்படி ஒரு சூழலில், கமல்காந்த் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், கமல்காந்த் ரத்தத்தில் இயல்புக்கு மாறாக ஆர்சனிக் மற்றும் தாலியம் போன்ற தாதுக்கள் கலந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சந்தேகத்தின் பெயரில், பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் போலீஸ் நிலையத்திலும்  புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, கமல்காந்த்தின் மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் கமல்காந்த் சகோதரி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதற்கு காரணம், மருத்துவமனையில் கமல்காந்த் இருந்த போது, அவர் அருகே இருக்கக் கூட காஜல் முனைப்பு காட்டவில்லை என்பது தான். அதே போல கணவர் மரணத்திற்கு பின், அவரது இன்சூரன்ஸ் பணம், தொழிலில் பங்கு உள்ளிட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார் காஜல். இவற்றின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் பல உண்மைகள் தற்போது அம்பலமாகி உள்ளது.

Woman slow poison to her husband plan with lover

கமல்காந்த் மற்றும் காஜல் ஆகியோரின் திருமணம் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணமாகி சுமார் 20 ஆண்டுகளான நிலையில், சமீப காலமாக கமல்காந்த் மற்றும் காஜல் ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதில், பிள்ளைகளுடன் தனது வீட்டிற்கு போன காஜல், சில மாதங்கள் கழித்து மீண்டும் கமல்காந்த்துடன் இணைந்து வாழ தொடங்கி உள்ளார்.

அது மட்டுமில்லாமல், ஹிதேஷ் என்ற நபருடன் காஜலுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கமல்காந்த்துக்கும் தெரிய வர, இதன் பெயரிலும் கணவன் மனைவி இடையே சண்டையும் உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் தான், கமல்காந்த்தை கொல்லவும் ஹிதேஷுடன் இணைந்து காஜல் திட்டம் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Woman slow poison to her husband plan with lover

அதன்படி, ஆர்சனிக் மற்றும் தாலியம் தாதுக்களை வாங்கி, சமைக்கும் உணவில் கலந்து ஸ்லோ பாய்சன் முறையில் கணவர் கமல்காந்த்துக்கு காஜல் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை சாப்பிட்டு கமல்காந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக கமல்காந்த்தின் தாயாரும் சில மாதங்களுக்கு முன் இதே முறையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் பின்னாலும் காஜல் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக காஜல் மற்றும் ஹிதேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #HUSBAND #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman slow poison to her husband plan with lover | India News.