காதல் மனைவிக்கு கழுதை குட்டி பரிசு.. கல்யாண விருந்தில் நடந்த சம்பவம்.. அதுக்கு அவர் ஒரு காரணம் சொன்னாரு பாருங்க.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காதல் மனைவிக்கு திருமண பரிசாக கழுதை குட்டி ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா. யூடியூப் பிரபலங்களான இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமண விருந்தின்போது. மாப்பிள்ளை அஸ்லான் ஷா தனது மனைவி வரிஷாவிற்கு கழுதை குட்டி ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அவருக்கு கழுதை குட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இவ்வாறு செய்ததாக அஸ்லான் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"வரிஷா கழுதைக் குட்டிகளை நேசிப்பார் என்று எனக்கு தெரியும், அதனால் இது என்னுடைய திருமணப் பரிசு" எனக் கூறியிருக்கிறார். மேலும், இதற்காக குட்டியை தாயிடமிருந்து பிரிக்கவில்லை எனவும், தாய் மற்றும் குட்டியை சேர்த்தே வளர்த்து வருவதாகவும் இந்த தம்பதி விளக்கம் அளித்திருக்கிறது. அஸ்லான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருந்து நிகழ்வின் படங்களுடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதில்,"பரிசாக ஏன் கழுதையை கொடுத்தேன் என்றால் அது உங்களுக்கு பிடிக்கும். மற்றொரு காரணம் உலகின் கடினமான உழைப்பாளி மற்றும் அழகான விலங்கு இது" என்கிறார் அஸ்லான். இந்த பரிசை கண்டு ஆச்சர்யப்படும் மணமகள் வரிஷா," அற்புதமான பரிசு. பலர் இதனை வெறுக்கக்கூடும். ஆனால், கழுதைகள் கடின உழைப்பிற்கான அடையாளங்கள். இந்த பரிசுக்கு நன்றி அஸ்லான். பயப்படாதீர்கள். நான் உங்களை கழுதைகளை போல வேலை செய்ய வேண்டும் என ஒருபோதும் சொல்ல மாட்டேன்" என புன்னகையுடன் கூற அங்கிருந்த அனைவரும் இதைக்கேட்டு புன்னகை செய்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சிலர், கழுதை குட்டியை அதன் தாயிடம் இருந்து பிரித்துவிட்டீர்களா? என கேள்வி எழுப்பி வந்தனர் இதற்கு பதில் அளித்திருக்கும் தம்பதி, கழுதை குட்டியை அதன் தாயுடன் வாங்கி வளர்த்து வருகிறோம் எனத் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே தனது மனைவிக்கு அஸ்லான் கழுதை குட்டியை திருமண பரிசாக அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
