காதல் மனைவி மீது வந்த சந்தேகம்.. தாலி கயிறை வைத்தே கணவன் செஞ்ச பயங்கரம்.. உறைந்துபோன கிராமம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செய்யாறு அருகே காதல் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Also Read | கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?.. சீன ஆய்வக விஞ்ஞானி சொல்லிய பதற வைக்கும் தகவல்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனுப்பத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். 28 வயதான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா இன்னும் இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார் ரஞ்சித். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கௌசல்யா கடந்த சில மாதங்களாக செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கௌசல்யா மற்றும் ரஞ்சித் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு ரஞ்சித் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அண்மையில் உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர்.
இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஞ்சித் - கௌசல்யா இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அனக்காவூர் காவல் நிலையத்தில் கௌசல்யா கணவர் மீது புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் ரஞ்சித் எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று கௌசல்யா ரஞ்சித் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது ரஞ்சித் தனது மனைவி கௌசல்யாவை கடுமையாக தாக்கியதாகவும் கௌசல்யாவின் தாலி கயிறை வைத்தே அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கௌசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கௌசல்யாவின் தாய் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
