இரண்டாவது மனைவி பெட்ரூமுக்குள் நுழைந்த பாம்பு.. "முதல் மனைவி கூட மீண்டும் வாழ கணவர் போட்ட திடுக்கிடும் பிளான்?"

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 15, 2022 12:41 PM

மத்திய பிரதேச மாநிலம், மந்த்சூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மோஜிம். இவரது மனைவி பெயர் சானு. சில ஆண்டுகளுக்கு முன், தனது கணவரை விட்டு சானு வேறொரு நபருடன் சென்றதாக தகவல்கள் கூறுகின்றது.

man use snake to avoid his second wife because of first wife

Also Read | IPL 2023 : "சார் இந்த தடவ சென்னை".. ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி சொன்ன பதில்.. வைரல் வீடியோ!!

இதன் காரணமாக, இரண்டாவதாக ஹலிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் மோஜிம். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில், ஹலிமாவை பாம்பு கடித்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஹலிமாவை பாம்பு கடித்ததன் பெயரில் நடந்த விசாரணையில் தெரிய வந்த விஷயம், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு கடத்தல் வழக்கில் சிக்கி சிறைக்கு மோஜிம் போகவே, அவரது முதல் மனைவி சானுவுக்கு வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவருடன் முதல் மனைவி செல்ல, ஜெயிலில் இருந்து வந்த மோஜிம், இதனை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் தான் ஹலிமா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், முதல் மனைவி சானுவை மறக்க முடியாமல் இருந்த மோஜிம், அடிக்கடி இரண்டாவது மனைவியான ஹலிமாவுக்கு தெரியாமல் அவரை சந்தித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட ஹலிமா, கணவரை கண்டிக்கவும் செய்துள்ளார். முதல் மனைவியை சந்திக்கக் கூடாது என்றும் அவர் கூறிய நிலையில், இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு உருவானதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது மனைவி அடிக்கடி இப்படி சண்டை போட்டு வந்ததால் அவரை கொலை செய்யவும் திட்டம் போட்டுள்ளார் மோஜிம்.

இதற்காக பாம்புகளை பிடிக்கும் நபர் ஒருவரை சேர்த்துக் கொண்டு விஷம் அதிகமுள்ள பாம்பு ஒன்றை ஹலிமா தூங்கி இருந்த அறையில் விட்டுள்ளார் மோஜிம். அது ஹலிமா காலில் கடிக்க, மயங்கி கிடந்த அவரை பார்த்து இறந்ததாகவும் மோஜிம் கருதி உள்ளார். ஆனால், சில நேரத்திற்கு பிறகு சுயநினைவு பெற்ற ஹலிமாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கடந்த சில மாதங்கள் முன்பு இந்த சம்பவம் நடந்த நிலையில், அங்கே அவருக்கு நினைவு திரும்பியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கால்பகுதி காயம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. மோஜிம் உள்ளிட்டோரை கைது செய்துள்ள போலீஸ், மேலும் ஒரு சில நபர்களை இந்த வழக்கு தொடர்பாக தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

முதல் மனைவிக்காக இரண்டாவது மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் தொடர்பான செய்தி, தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | அன்னைக்கி டீக்கடையில் வேலை, இன்னைக்கி 'IAS' அதிகாரி.. கொஞ்சம் கொஞ்சமா போராடி சாதிச்சு காட்டிய நபர்.. சபாஷ்!!

Tags : #MADHYA PRADESH #MAN #SNAKE #FIRST WIFE #SECOND WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man use snake to avoid his second wife because of first wife | India News.