திருமண நிகழ்ச்சியில்.. உற்சாகமா ஆடிட்டு இருந்த மனுஷன்.. ஒரு செகண்ட்ல நடந்த விபரீத சம்பவம்.. பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது நாம் சமூக வலைத்தளத்தில் வலம் வரும்போது நம்மைச் சுற்றி நடக்கும் நிறைய அதிர்ச்சிகரமான செய்திகளை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Also Read | 38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த உலகின் பெரிய எரிமலை.. இனிமே என்ன நடக்கும்?.. எச்சரிக்கை பின்னணி!!
அந்த வகையில் ஒரு அதிர்ச்சி நிறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் பதற்றத்தில் ஆற்றியுள்ளது.
பொதுவாக ஒரு நபருக்கு வாழ்க்கையில் எந்த நிமிடம் எந்த காரியம் நடக்கும் என்பதை நிச்சயமாக யோகிக்கவே முடியாது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நம் வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதே வேளையில், மோசமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது நல்ல ஒரு விஷயம் எதிர்பாராத வகையில் நம்மைத் தேடி வரும்.
இப்படி ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பார்ப்பில்லாமல் எந்த விஷயம் எந்த நிமிடம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமான ஒரு செய்தி தொடர்பான வீடியோ தான் தற்போது பலரையும் கலங்கடித்து வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியை சேர்ந்த மனோஜ் விஸ்வகர்மா என்ற 40 வயது நபர் ஒருவர், பிப்லானி கத்ரா என்னும் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கலந்து கொள்வதுடன் மட்டுமில்லாமல் திருமண நிகழ்வில் வந்த சிலருடன் சேர்ந்து மனோஜ் நடனமாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது.
மிக உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த மனோஜ் விஸ்வகர்மா திடீரென மயங்கி நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடனமாடிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீப காலமாகவே, திருமண விழாக்களில் அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போது பலரின் உயிர் பிரிவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியாகி வருவது தொடர்ந்து மக்கள் பலரையும் பீதியில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
