அன்னைக்கி டீக்கடையில் வேலை, இன்னைக்கி 'IAS' அதிகாரி.. கொஞ்சம் கொஞ்சமா போராடி சாதிச்சு காட்டிய நபர்.. சபாஷ்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, கடின உழைப்பும் நாம் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டால் நிச்சயம் ஒரு நாள் நாம் சாதித்து விடலாம்.AA
Also Read | IPL 2023 : "சார் இந்த தடவ சென்னை".. ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி சொன்ன பதில்.. வைரல் வீடியோ!!
ஒரு சில முறை தடங்கல்கள் வந்து தோல்விகள் ஏற்பட்டாலும் கூட துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் ஒரு நாள் லட்சியத்தை அடைந்து விடலாம்.
அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், தான் சாதிக்க வேண்டும் என்ற நினைப்பில் செய்த விஷயம், பெரிய அளவில் பலரையும் சபாஷ் போட வைத்து வருகிறது.
இன்று நம்மில் பலருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது உயர்ந்த கனவாக உள்ளது. ஏராளமானோர் இதில் முயன்று வரும் சூழலில், அதில் தேவைக்கு ஏற்ப ஆட்கள் தேர்வாக மற்றவர்கள் தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும், அந்த இலக்கை அடைவது வரை நிச்சயம் முயன்று கொண்டே தான் இருப்பார்கள்.
அப்படி தான் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹிமான்ஷு குப்தா என்ற வாலிபர் சாதனை படைத்துள்ளார். டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஹிமான்ஷுவுக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை கிடைத்துள்ளது. ஆனால், UPSC தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடனும் இருந்துள்ளார். அப்படி இருக்கையில், டீக்கடையில் பணிபுரிந்த படி தனது கனவை சாதிக்க தேர்வுக்காகவும் தயாராகி வந்துள்ளார் ஹிமான்ஷு குப்தா.
முன்னதாக சிறு வயதில், பொருளாதார நெருக்கடி மிகுந்த குடும்பத்தில் வாழ்ந்து வந்த ஹிமான்ஷு, குடும்ப சூழ்நிலை காரணமாக பல உதவிகளையும் செய்து வந்தார். இதற்கு மத்தியில், தேர்வுக்கும் தயாராகி வந்த ஹிமான்ஷு, 3 ஆவது முயற்சியில் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். முதல் தேர்விலேயே அவர் வெற்றி பெற்றாலும், ஐஏஎஸ் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் முயற்சி செய்து 3 ஆவது முறை முயற்சித்த போது தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக மாறி உள்ளார்.
தொடர்ந்து கடின உழைப்பு மற்றும் இடைவிடாத முயற்சி காரணமாக தனது கனவை நிறைவேற்றி உள்ள ஹிமான்ஷு, நெருக்கடி நிலையில் இருந்து சாதிக்க விரும்பும் பலருக்கும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.