"உங்க ஊருக்கு பொண்ணே தர மாட்டோம்".. ஒரு வருசமா NO கல்யாணம்.. 'ஈ'க்களால் தூக்கம் தொலைத்த கிராமம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேச மாநிலத்தில் ஈக்கள் காரணமாக, திருமண பேச்சு கூட நடைபெறாமல் இருப்பது குறித்த தகவல், அதிகம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | 9 வருடம் முன் இறந்த மனைவி.. தற்கொலைன்னு நெனச்சிட்டு இருந்தப்போ.. தெரியவந்த அதிர்ச்சி.!
பொதுவாக நம்மை சுற்றி ஈக்கள் அல்லது எறும்புகள் உள்ளிட்ட சிறு சிறு உயிரினங்களை பார்க்கும் போது சாதாரணமாக கடந்து சென்று விடுவோம்.
ஆனால், அப்படிப்பட்ட ஈக்கள் காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சில கிராமங்கள் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஹர்தோய் என்னும் பகுதியில் அமைந்துள்ளது பதைய்யன் புர்வா கிராமம். இந்த கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக திருமணம் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. பொதுவாக, தண்ணீர் மற்றும் மின்சார பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக திருமண காரியங்கள் சில ஊர்களில் தடைபடும் சூழலில், இந்த கிராமத்தில் ஈக்கள் காரணமாக தான் திருமணம் செய்து கொள்ள முடியாமல் அங்குள்ளவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியில் கோழிப் பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் பின்னர் தான், அந்த கிராமத்தில் ஈக்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும் சொல்லப்படும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ஈக்கள் தொல்லை அதிகரித்ததன் காரணமாக போராட்டத்திலும் மக்கள் குதித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இந்த ஈக்கள் தொல்லை காரணமாக அந்த ஊரில் உள்ள நபர்களுக்கு யாரும் பெண் தரவும் முன் வரவில்லை என கூறப்படும் நிலையில், ஏற்கனவே திருமணம் முடிந்து அங்கே வாழ்ந்து வரும் பெண்களும் தாய் வீட்டிற்கு சென்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மீண்டும் அந்த கிராமத்திற்கு அவர்கள் செல்ல தயங்குகின்றனர். அதே போல, அந்த கிராமத்தில் இருந்து வேறு ஊருக்கு திருமணமாகி போன பெண்களும் மீண்டும் தாய் வீட்டிற்கு வர மறுக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
தினமும் ஆயிரக் கணக்கான ஈக்கள் மொய்ப்பதால் பெரும் தொந்தரவுக்கு ஆளாகி வரும் மக்கள் விடிவு காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர். தைய்யன் புர்வா கிராமம் மட்டுமின்றி குயியன்ம் தாஹி, சேலம்பூர், ஜல்புர்வா, நயா கான் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் பலவும் இதன் காரணமாக கடும் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஈக்கள் என சாதாரணமாக நாம் கருதும் உயிரினங்கள் காரணமாக ஒரு சில கிராமத்தில் பெண் கொடுக்க கூட யாரும் முன் வராத
Also Read | சிதைந்து போன உடலுக்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பாத்ததும் ஓட்டம் பிடிச்ச நிபுணர்.. கதிகலங்க வைத்த சம்பவம்!!

மற்ற செய்திகள்
