விபத்தில் இறந்து போன மனைவி?.. போலீஸ் விசாரணையில் கணவர் சொன்ன திடுக்கிடும் தகவல்!!.. "எல்லாம் அதுக்காக தானா?"

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 01, 2022 11:22 PM

கடந்த மாதம், பெண் ஒருவர் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், இது குறித்து தற்போது தெரிய வந்துள்ள விஷயம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Husband who punished his wife for get 2 crore insurance money

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி பெயர் ஷாலு தேவி. கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது சகோதரர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் கோயில் ஒன்றிற்கு ஷாலு தேவி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அங்கே அரங்கேறியுள்ளது. ஷாலு தேவி மற்றும் அவரது சகோதரர் சென்ற பைக்கின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஷாலு தேவி குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தொடர்ந்து கார் மோதி விபத்து ஏற்பட்டு இறந்து போன ஷாலு தேவி மற்றும் அவரது சகோதரர் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார், இது தொடர்பாக விசாரித்த போது பரபரப்பு திருப்புமுனையாகவும் ஒரு விஷயம் அமைந்துள்ளது. அதாவது ஷாலு தேவி மற்றும் அவரது சகோதரர் சென்ற பைக் மீது கார் வேண்டும் என்றே பக்கவாட்டில் மோதியதாக தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Husband who punished his wife for get 2 crore insurance money

அது மட்டுமில்லாமல், ஷாலு உயிரிழந்ததன் காரணமாக அவரது பெயரில் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால் 1.90 கோடி ரூபாய் மகேஷ் சந்திற்கும் கிடைக்க இருப்பதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விபத்தில் சில சந்தேகங்கள் போலீசாருக்கு எழவே, ஷாலுவின் கணவரான மகேஷ் சந்தை போலீசார் விசாரணை செய்தனர்.

அப்படி அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு, ஷாலுவின் வரதட்சணை புகார் அடிப்படையில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் தனது மனைவியை கொலை செய்ய வேண்டும் என்றும் மகேஷ் நினைத்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் மூலம் லாபத்தை உருவாக்க வேண்டும் என்றும் எண்ணி உள்ளார்.

அதன் படி, மனைவி ஷாலு தேவி மீது காப்பீடு திட்டம் ஒன்றை மகேஷ் செய்திருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், சம்பவத்தன்று மனைவியை கோவிலுக்கு செல்லுமாறு மகேஷ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தான் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படை மூலம் விபத்து நடந்து மனைவி இறந்ததாகவும் நாடகமாடி உள்ளார் மகேஷ் சந்த். அதே போல, 10 லட்ச ரூபாய் வரை மகேஷ் சந்த் கூலிப்படையிடம் பேசி அதற்கான முன்பணத்தையும் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

Husband who punished his wife for get 2 crore insurance money

இது தொடர்பாக, மகேஷ் சந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Tags : #HUSBAND #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Husband who punished his wife for get 2 crore insurance money | India News.