கறி குழம்பில் மயக்க மருந்து.. செப்டிக் டேங்க் குழியில் கணவர் உடல்.. மனைவி புகார் கொடுத்த 10 நாளில் நடந்த ட்விஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலத்தில், கணவர் காணாமல் போனதாக மனைவி ஒருவர் புகாரளித்திருந்த நிலையில், விசாரணையில் தெரிய வந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பக்சிவலா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்வீர் கவுர். இவர் தனது கணவரான அம்ரிக் சிங் காணாமல் போனதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அம்ரிக் சிங் காணாமல் போனது தொடர்பாக போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில் தான், போலீசாரின் சந்தேகம் மனைவி ஜஸ்வீர் கவுர் பக்கம் திரும்பி உள்ளதாக தெரிகிறது. அவரிடம் கணவர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முன்னதாக, ஜஸ்வீர் செல்போனை போலீசார் ஆராய்ந்த போது சில விவரங்கள் கிடைத்துள்ளது.
அதன்படி, ஜஸ்வீருக்கு அதே ஊரை சேர்ந்த சுர்ஜித் சிங் என்று நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அம்ரிக் சிங்கிற்கும் தெரிய வர, மனைவியையும் அவர் கண்டித்துள்ளார். ஆனாலும் இந்த உறவு தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தனது கணவரான அம்ரிக் சிங்கை கொலை செய்யவும் சுர்ஜித் சிங்கிடம் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார் ஜஸ்வீர் கவுர்.
அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இறைச்சியில் மயக்க மருந்து கலந்து அம்ரிக் சிங்கிற்கு கொடுத்துள்ளார் ஜஸ்வீர். இதன் பின்னர், அம்ரிக்கும் மயக்கம் அடைய சுர்ஜித் சிங் உதவியுடன் அவரை கொலை செய்துள்ளார் ஜஸ்வீர். இதன் பின்னர், அவர் வீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை குழியில் உடலை வீசி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, ஊரில் உள்ள மக்களிடம் தனது கணவர் காணாமல் போனதையும் ஜாஸ்வீர் தெரிவித்துள்ளார். பின்னர், 20 நாட்கள் கழித்து கணவர் அம்ரிக் சிங் காணாமல் போனது குறித்தும் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதன் பின்னர், அவரிடம் சந்தேகத்தின் பெயரில் நடந்த விசாரணையில் உண்மை தெரிய வர, கணவரை வீசிய கழிவறை குழியையும் ஜஸ்வீர் காட்டி கொடுத்துள்ளார். கணவர் காணாமல் போனதன் பெயரில், இரண்டு பிள்ளைகளுடன் சோகத்தில் இருந்து வந்த மனைவியே கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
