9 வருடம் முன் இறந்த மனைவி.. தற்கொலைன்னு நெனச்சிட்டு இருந்தப்போ.. தெரியவந்த அதிர்ச்சி.!
முகப்பு > செய்திகள் > இந்தியா9 ஆண்டுகளுக்கு முன் விபரீத முடிவை எடுத்து பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கருதப்பட்டு வந்த நிலையில், இத்தனை நாட்கள் கழித்து தெரிய வந்த உண்மை கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | Kris Wu : கனேடிய இளம் பாடகருக்கு 13 ஆண்டுகள் சிறை..! சீன நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! பரபரப்பு பின்னணி
திருவனந்தபுரம் அருகே நேமம் என்னும் பகுதியை சேர்ந்தவர் அஸ்வதி. இவரது தாய் இறந்து போன நிலையில், தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், ரதீஷ் என்ற நபரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார் அஸ்வதி. திருமணத்திற்கு பின்னர், கணவர் ரதீஷூடன் தனது பாட்டி வீட்டிலேயே வசித்தும் வந்துள்ளார் அஸ்வதி.
அப்படி ஒரு சூழலில், மனைவி அஸ்வதியின் பாட்டி வீடு மற்றும் 3 சென்ட் நிலத்தை தனது பெயரில் மாற்றி எழுதி வைக்க வேண்டும் என்றும் ரதீஷ் வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், ரதீஷ் மது பழக்கம் உடையவராக இருந்ததால், அதற்கு அஸ்வதியின் பாட்டி மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன் பெயரில், வீட்டிற்குள் அடிக்கடி வாக்குவாதம் அரங்கேறி வந்ததால் அங்கிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் வீட்டிற்கும் சென்று தங்க தொடங்கி உள்ளார் அஸ்வதியின் பாட்டி. இதன் பின்னர், ரதீஷ் மற்றும் அஸ்வதி ஆகியோர் தனியாக வாழ்ந்து வர, அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்துள்ளனர். இதற்கு மத்தியில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறின் பெயரில் மனைவி அஸ்வதி தீக்குளித்து விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக ரதீஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அஸ்வதி தற்கொலை செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதி மக்கள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், 9 ஆண்டுகள் கழித்து குற்றப்பிரிவு போலீசார் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மீதமுள்ள வழக்குகளை விசாரிக்க தொடங்கிய போது அஸ்வதியின் மரணம் குறித்தும் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
அஸ்வதி உயிரிழந்த போது ரதீஷ் கையில் தீக்காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மனைவியை காப்பாற்ற முயன்ற போது ஏற்பட்டதாக போலீசாரிடம் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால், அஸ்வதியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், தீக்காயங்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அஸ்வதி கையில் தீக்காயங்கள் இல்லாத போது, ரதீஷ் கையில் காயங்கள் இருந்தது சந்தேகத்தை கிளப்பியது.
ஒரு நபர் தீக்குளித்து இறக்கும் போது அவர்களின் கைகள் தான் முதலில் எரியும் என்ற சூழலில், இது தொடர்பாக ரதீஷிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 9 ஆண்டுகள் கழித்து மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்ட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
