நண்பர்களுடன் பந்தயம்.. மண மேடையில் வைத்து முத்தம் கொடுத்த மாப்பிள்ளை??.. அடுத்த செகண்ட்டே மணப்பெண் எடுத்த பரபரப்பு முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி எந்த ஒரு விஷயம் நடந்தாலும் பெரிய அளவில் பேசு பொருளாக மாறும்.

இதற்கு காரணம் திருமணத்தைச் சுற்றி தயார் செய்யப்படும் ஒவ்வொரு விஷயமும் புதுமையாகவும் பலரது மத்தியில் வைரலாக கூடிய வகையிலும் இருக்க தான் பலரும் ஆசைப்படுகிறார்கள்.
திருமண பத்திரிகைகள், பேனர்கள், போட்டோஷூட் உள்ளிட்ட விஷயங்கள் அதிக கவனம் பெறுவதையும் நாம் பார்த்திருப்போம் இப்படி திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் வைரலாகும் அதே வேளையில், திருமண மேடையில் கூட யாரும் எதிர்பாராத விதத்தில் நடக்கும் சம்பவங்கள் கூட ஒட்டுமொத்த திருமண நிகழ்வை புரட்டி போடும் அளவுக்கு மாறுகின்றது.
இந்த நிலையில் தற்போதும் ஏறக்குறைய அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
உத்திர பிரதேச மாநிலம், சாம்பல் என்னும் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்று வந்துள்ளது. மேலும் அங்கே சுமார் 300 விருந்தினர்கள் வரை கலந்து கொண்டிருந்த நிலையில், திருமண ஜோடிகள் மாலை மாற்றவும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கொஞ்சம் கூட எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண், உடனடியாக அங்கிருந்து எழுந்து போய் போலீசருக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிகிறது. மக்கள் பலர் முன்னிலையில் மேடையில் மணமகன் முத்தம் கொடுத்ததால் இந்த திருமணத்தை வேண்டாம் என மறுத்த அந்த பெண், மணமகன் தனது நண்பர்களுடன் வைத்த பந்தயத்தில் ஜெயிப்பதற்காக தான் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறி உள்ளார்.
அதே போல, மாப்பிள்ளையின் குணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி திருமணத்தை வேண்டாம் என்றும் மணப்பெண் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், மேடையில் தனக்கு முத்தம் தந்ததால் விருந்தினர்கள் முன்னிலையில் தான் அவமானப்பட்டதாகவும், எனது சுயமரியாதை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை என்றும், வருங்காலத்தில் அவர் இப்படி தான் இருப்பார் என்பதால் அவருடன் வாழ விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, போலீசார், குடும்பத்தினர் உள்ளிட்டோர் அந்த பெண்ணை சமரசம் செய்ய பார்த்த போதும் அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்போது திருமணம் வேண்டாம் என இருக்கும் மணப்பெண்ணிடம் சில தினங்கள் கழித்து பேச்சு வார்த்தை நடத்தி பார்க்கலாம் என்றும் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அதே போல, சடங்குகள் முடிந்து அவர்களின் திருமணமும் முடிந்ததாக கூறப்படும் நிலையில், மாப்பிள்ளை வேண்டாம் என பெண் தீர்மானித்துள்ளதால் சில தினங்கள் கழித்து பேசி பார்த்த பிறகு என்ன நிலவரம் என்பதை முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | கடலுக்கு நடுவே தத்தளித்த நபர்.. பத்திரமாக மீட்டதும் சொன்ன விஷயம்.. அதிர்ந்து போன மீனவர்கள்!!

மற்ற செய்திகள்
