'ஆமா எனக்கு மயக்கமருந்து கொடுத்து'...'என்ன நாசம் பண்ணிட்டாங்க'... பிரபலத்தின் பகீர் இன்ஸ்டாகிராம் பதிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டு, சில நாட்கள் தான் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகப் பிரபல பாடகி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கிராமி விருது பெற்ற பிரபல இங்கிலாந்து பாடகி டஃபி. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் திடீரென அவர் குறித்து எந்தவித தகவலும் இல்லாமல் இருந்தது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனிடையே அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அது தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பதிவில், ''இதை எப்படி எழுதுவது என்று நான் பல முறை யோசித்துள்ளேன். தற்போது ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை. எனக்கு என்ன நடந்தது, ஏன் திடீரென காணாமல் போய்விட்டேன் எனப் பலரும் எண்ணலாம்.
ஒரு செய்தியாளர் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஆம், நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். எனக்கு மயக்க மருந்து கொடுத்து என்னை நாசம் செய்துவிட்டார்கள். சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி வந்துவிட்டேன். அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வர நேரம் எடுத்தது. நான் ஏன் என் வலியை என் குரல் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை என்று நீங்கள் வியக்கலாம்.
என் கண்களிலிருந்த சோகத்தை யாருக்கும் காட்ட விரும்பவில்லை. இதயம் நொறுங்கியபோது எப்படிப் பாட முடியும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். பின்பு மெதுவாக என் இதயம் சரியானது. விரைவில் நான் பேட்டி அளிக்கிறேன். உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் பதில் அளிக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அன்பாக இருப்பதற்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார் டஃபி.
டஃபியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம் என ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
