‘3 வருஷம் டேட்டிங்’.. “கல்யாணம் பண்ணிக்கலாமா?”.. ஆஸி வீரருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த தென்னிந்திய வம்சாவளி பெண்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Feb 27, 2020 07:28 AM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார்.

Aus Cricketer Glenn Maxwell marries south indian origin girl

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமன் என்கிற பெண்ணின் காதல் வலையில் விழுந்த மேக்ஸ்வெல் 3 வருடங்களாக வினியுடன் ஊர் சுற்றியிருக்கிறார். அதிக மன அழுத்தத்தில் இருந்த மேக்ஸ்வெல் மீண்டதற்கு வினி ஒரு முக்கிய காரணம் என்கிற நிலையில், டேட்டிங்கில் இருந்த மேக்ஸ்வெல், திடீரென திருமணம் செய்துகொள்ளலாமா ? என கேட்டுள்ளார்.

அதற்கு வினியோ சம்மதிக்க, இருவரும் மோதிரத்தை மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்துள்ளனர். 31 வயதான மேக்ஸ்வெல் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 27 வயதான வினி ராமன் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும், ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த அவர் மருந்தாளர் படிப்பை முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #WEDDING