‘10 ஆயிரம்’ ரூபாய் ஆஃபருக்கு ‘ஆசைப்பட்டு’... 2 ஆண்டுகளில் ‘33 பேரால்’... ‘கோடிகளை’ இழந்த பரிதாபம்... போலீசாருக்கு வந்த ‘அதிர்ச்சி’ புகார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 19, 2020 11:42 PM

அகமதாபாத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் தான் ரூ 9 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

Gujarat 80 Year Old Man Grabs Tour Offer Loses Rs 9 Crore

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தினேஷ் படேல் என்பவர் திங்கட்கிழமை சைபர் கிரைம் போலீசாரிடம் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், “2017ஆம் ஆண்டு பிரபல நிறுவனம் ஒன்றின் பெயரில் எனக்கு வந்த இமெயிலில், ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள சுற்றுலா ஆஃபர் ஒன்று எனக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து நான் பார்த்தபோது, முதலில் அதற்கு ரூ 10 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் எனவும், அதை செலுத்தினால் உறுதியாக பரிசு கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

அதை நம்பி நானும் ரூ 10 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் செலுத்த, அப்போது தொடங்கி பல முறை இதேபோல பலரும் என்னைத் தொடர்புகொண்டு பணம் செலுத்தினால் ஆஃபர் கிடைக்கும் எனக் கூற நானும் பணம் செலுத்தினேன். அக்டோபர் 18, 2017 முதல் நவம்பர் 27, 2019 வரை 2 ஆண்டுகளில் இதுவரை நான் 33 நபர்களால் ஏமாற்றப்பட்டு ரூ 9 கோடி ரூபாயை இழந்துள்ளேன். ரூ 10 ஆயிரம் முதல் ரூ 50 லட்சம் வரை பலமுறை செலுத்திய பிறகும் எனக்கு சுற்றுலா ஆஃபர் எதுவுமே வழங்கப்படவில்லை. என் பணமும் திரும்பக் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதியவர் கூறிய 33 வெவ்வேறு நபர்கள் மீது  வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MONEY #GUJARAT #OFFER #CHEATING #ONLINE