இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 30, 2019 12:43 PM
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும். மேலும் ஒரு நாள் விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2. பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த பேஸ்புக் அக்கவுண்டினை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
3. மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.
4. புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
5. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன.
6. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 6 மணி நேரம் தரிசனத்திற்காக பொதுமக்களை அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்படவுள்ளது.
7. விஸ்டன் வெளியிட்டுள்ள கடந்த பத்து ஆண்டுகளுக்கான டி20 கிரிக்கெட் கனவு அணியில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் பும்ரா இடம்பெற்றுள்ளனர்.
8. மராட்டிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார், மராட்டியத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சிவசேனாவின் இளந்தலைவர் ஆதித்யா தாக்ரே, அமைச்சராகியுள்ளார்.
9. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் நீதிமன்ற பதிவாளரிடம் வழங்க, மாநில தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
10. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.