ஆமா! அவர எப்பத்தான் 'கேப்டனா' போடுவீங்க... கேள்வி கேட்ட ரசிகருக்கு... செம 'பதிலடி' கொடுத்த சூப்பர் ஸ்டார்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 23, 2020 05:03 PM

ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா அணியின் இணை உரிமையாளராக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் திகழ்கிறார். கவுதம் கம்பீர் தலைமையில் மிகவும் வலிமையாக இருந்த கொல்கத்தா அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் தற்போது தடுமாறி வருகிறது. எனினும் தினேஷ் கார்த்திக்கே கேப்டனாக தொடர்வார் என அணி நிர்வாகம் சமீபத்தில் விளக்கம் வெளியிட்டது.

IPL 2020: KKR Co Owner Shah Rukh Khan gives on epic reply

இந்த நிலையில் இளம்வீரர் சுப்மன் கில்லை எப்போது கேப்டனாக போடுவீர்கள்? என்று ரசிகர் ஒருவர் பாலிவுட் சூப்பர்ஸ்டாரும், அணியின் இணை உரிமையாளருமான ஷாரூக்கானிடம் கேட்க பதிலுக்கு அவர், '' கொல்கத்தா அணி உங்களை தலைமை பயிற்சியாளராக மாற்றியவுடன் நண்பரே,'' என பதில் அளித்துள்ளார்.

இதைப்பார்த்த கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சிரிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, நல்ல பதில் என கிண்டல் செய்துள்ளது.