"நான் சொன்னது நடக்குதா? இல்லையா?..." அரசியல் 'நாஸ்ட்ரடாமஸ்' கமல்ஹாசனின் ஆருடம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 17, 2020 03:09 PM

நான் சொன்னது போலவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்பட்டுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார் . 

As I said, there is a division in the DMK-Congress-kamal

பத்தாண்டுகளுக்கும் மேலாக திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்த நிலையில்கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அச்சாரம் விடுப்பது போன்று சமீபத்தில் திமுக, கூட்டணி தர்மத்தை மீறி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அரசல் புரசலாக திமுக-காங்கிரஸ் கூட்டணி பிளவு  குறித்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில்,  திமுக  கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, காங்கிரசுக்கு ஓட்டே இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படையாக உடைத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன், அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

Tags : #KAMALHASSAN #DMK #CONGRESS #DURAIMURUGAN #K.S.ALAGIRI