“முறைகேடு இருக்குற மாதிரி தெரியுதே?”.. “முதலிடம் பிடிச்ச 35 பேருக்கு..”.. “டிஎன்பிஎஸ்சி போட்ட அதிரடி உத்தரவு!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 10, 2020 11:46 AM

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, முதல் 35 இடங்களைப் பிடித்தவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 போ்  கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வினை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகின.

malpractice in group4 exam tnpsc asks first 35 to explain

ஆனால் இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முதல் 100  இடங்களைப் பிடித்தனர். இவர்கள் அனைவருமே வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. இதனால் இத்தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, முதல் 35 இடங்களைப் பிடித்தவர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

மற்ற தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : #EXAM #TNPSC #GROUP4