சும்மா ‘இதையே’ ஊதி பெருசாக்குறாங்க... நான் இதுக்கெல்லாம் ‘கவலை’ படமாட்டேன்... ‘எரிச்சலான’ பிரபல இந்திய வீரர்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அஜிங்கிய ரஹானே பதிலளித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் அந்நாட்டு பவுலர்கள் ஷார்ட் பிட்ச் பௌலிங்கை வைத்து இந்திய பேட்ஸ்மென்களின் முன்காலை நீட்டி ஆடும் பழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியை 2-0 என ஒயிட் வாஷ் செய்தனர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் மீது பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள அஜிங்கிய ரஹானே, “இந்த ஷார்ட் பிட்ச் பவுலிங் குறித்து அதிகமாக பேசி ஊதி பெரிதாக்கி வருகிறார்கள். அதையே திரும்பத் திரும்ப பேசி விமர்சனம் செய்கிறார்கள். 2018ஆம் ஆண்டு மெல்போர்னில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லையா? ஒரு போட்டியில் சரியாக விளையாடாததால் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு நாங்கள் மோசமான வீரர்களாகி விட மாட்டோம். நியூசிலாந்து பவுலர்கள் காற்று, பிட்ச் போன்ற உள்நாட்டு நிலைமைகளை திறமையாக பயன்படுத்தி கடினமான கோணங்களில் வீசினார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் இதுகுறித்து அதிகமாக கவலையும் படப்போவதில்லை, இது தொடர்பாக ஆழமாக ஊடுருவிப் பார்க்கப்போவதும் இல்லை. ஒரு மோசமான போட்டி அணியை மோசமானதாக்கி விடாது. கடந்த 3-4 ஆண்டுகளாக நாங்கள் நன்றாகவே விளையாடி வருகிறோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சில போட்டிகளில் வெற்றி பெறுவோம், சில போட்டிகளில் தோற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
