'21 அரிவாள்கள் மீது ஏறி நின்று'.. சாமியார் அருள்வாக்கு!... '68 கிலோ மிளகாய் தூள் அபிஷேகம்!'... களைகட்டிய கோவில்பட்டி கோயில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 25, 2020 01:38 PM

கோவில்பட்டி கோவில் கொடைவிழாவில் 21 அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாருக்கு பக்தர்கள் 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து அபிஷேகம் செய்துள்ளனர்.

godman stood on 21 aruval in kovilpatti temple festival

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் அருள்மிகு ராஜகணபதி அருள்தரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. இதன் 65ம் ஆண்டு கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில் நேற்று, பக்தர்களின் 21 அக்னிச்சட்டி ஊர்வலமும், பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பகலில் பழ பூஜை நடைபெற்றது. பின்னர், 21 அரிவாள்கள் மீது நின்று சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பக்தர்கள் 68 கிலோ மிளகாய்த் தூளைக் கரைத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தல் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : #KOVILPATTI #TEMPLE #FESTIVAL