'அந்த பொண்ண ஃபாலோ பண்ணுவ?'.. 'இளைஞரை நையப்புடைத்து.. நிர்வாணமாக்கி!'.. ஊர்மக்கள் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 25, 2019 05:12 PM

அமிர்தசரஸில் உள்ள குர்வாலி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் மீது ஒரு தலை பட்சமாக காதல் வயப்பட்டுள்ளார்.  சத்திவிண்ட் என்கிற பகுதியைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணை கண்டதும் காதல் வயப்பட்ட அந்த இளைஞர், பல நாட்களாக தொடர்ந்து ஒரு தலைக் காதல் நோய்க்கு ஆட்பட்டு அப்பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

village people assaults youth for one side love in amritsar

ஆனால் அந்த இளம் பெண்ணோ வாலிபரை திரும்பிக் கூட பார்க்காத நிலையில், ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட இளைஞர் தனது செல்போன் எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதி அந்த பெண்ணின் பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்று தூக்கி எறிந்துவிட்டு அப்பெண்ணை கடக்க முயற்சித்துள்ளார். ஆனால் அப்பெண் கத்தி ஊரைக் கூட்ட, ஊரே கூடி அந்த இளைஞரை நையப் புடைத்துள்ளனர்.

அதன் பின் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். அதையும் அந்த வாலிபர் செய்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத ஊர் மக்கள், இனி எந்த பிடிக்காத பெண்ணையும் அந்த இளைஞர் பின்தொடர்ந்து காதல் செய்யச் சொல்லி தொல்லை கொடுக்கக் கூடாது என்று சொல்லி, அவரை சரமாரியாக அடித்து, ஆடைக் கழற்றி நிர்வாணமாக்கி பைக்கில் ஏற்றி அனுப்பினர்.

ஊர் மக்களின் இந்த செயல் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும், வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #LOVE #YOUTH