‘திருமணமான’ சில நாட்களில்... ‘புதுமாப்பிள்ளைக்கு’ பேஸ்புக்கில் வந்த ‘வீடியோ’... அதிர்ந்துபோனவருக்கு ‘அடுத்து’ மனைவியிடமிருந்து வந்த ‘மிரட்டல்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 17, 2020 06:33 PM

திருமணமான சில நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு மனைவியின் ஆபாச வீடியோவை அனுப்பிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bengaluru Man Gets Wifes Obscene Video Days After Marriage

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், சிக்மகளூவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.  அதன்பிறகு டிசம்பர் 13ஆம் தேதி புதுமாப்பிள்ளையின் பேஸ்புக் அக்கவுண்டிற்கு இளைஞர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில் அவருடைய மனைவி மற்றொரு ஆணுடன் தனிமையில் இருக்கும் வீடியோவும், புகைப்படமும் இருந்துள்ளது.

அதைப் பார்த்து அதிர்ந்துபோன அவரிடம் மெசேஜ் அனுப்பிய நபர், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகும் உங்களுடைய மனைவி என்னை சந்தித்தார் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த புதுமாப்பிள்ளை மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அவருடைய மனைவி தன்னை விவாகரத்து செய்தால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த புதுமாப்பிள்ளை இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில், அவருக்கு அந்த வீடியோ, புகைப்படங்களை அனுப்பிய நபர் அவருடைய மனைவியின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் முன்னாள் காதலனைக் கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #BENGALURU #MARRIAGE #HUSBAND #WIFE #VIDEO #LOVER