‘அரச’ மரத்துக்கும், ‘வேம்பு’ மரத்துக்கும் கல்யாணம்...! ‘பத்திரிக்கை அடிச்சு, சீர்வரிசை பண்ணி, அடேங்கப்பா...’ மணமக்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 12, 2020 05:48 PM

சேலம் மாவட்டத்தில் மழை வருவதற்காக மரத்திற்கும் மரத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர் ஓமலூர் பகுதி விவசாயி மக்கள்.

The villagers married for the rain and the tree for the rain!

கடந்த ஒரு வருடமாக சேலம் மாவட்டம், ஓமலுர் அருகே உள்ள கருப்பூர் பேரூராட்சி ஈச்சங்காட்டுர் என்ற  மழை பெய்யாமல் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். விவசாயத்தை நம்பி உள்ள அப்பகுதி மக்கள் மழை பெய்யாததால் விளைச்சல் பொய்த்து போனது. இதனால் நிலத்தடி நீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு மேலாக இதே நிலை நிலவி வருவதால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி, மழை பெய்ய வதற்கு அரச மரத்திற்கும் , வேம்பு மரத்திற்கும் திருமணம் செய்து நூதன வழிபாடு நடத்தினர். அதுமட்டும் இல்லாமல் மனிதர்களுக்கு திருமணம் செய்வது போல் பத்திரிகை அடித்து அதில் அரசமரம் மணமகனாகவும், வேம்பு மரம் மணமகள் என்றும் சீர்வரிசைகள், கொண்டு வந்து ஊரில் உள்ள பெரியவர்கள் கண்ணிகாதானம் செய்து திருமணம் நடத்தினர்.

இந்த திருமணத்தில் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தலை வாழையிலையில் அறுசுவை உணவு பரிமாறி, திருமணம் முடிந்து போவோருக்கு தாம்பாள பையும் அளித்து உள்ளனர். திருமணம் நடந்து முடிந்த பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி மழை வேண்டி வழிபாடு செய்தனர்.

Tags : #MARRIAGE #TREE