டெல்லி சென்ற விமானத்தில் நடுவானில்.. ‘6 மாத குழந்தைக்கு நடந்த பரிதாபம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 25, 2019 08:36 PM

டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் 6  மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baby with heart condition dies on board Patna Delhi flight

பாட்னாவிலிருந்து  டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 6 மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர். குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே உள்ள இதயக் கோளாறை சரிசெய்ய சிகிச்சைக்காக அவர்கள் டெல்லி புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைக்குச் செல்லும் வழியில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதையறிந்த சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை அடைந்ததும் போலீஸார் குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : #DELHI #SPICEJET #6MONTHSOLD #BABY #HEARTPROBLEM