‘அவனுக்கு இன்னைக்கு பொறந்த நாளுங்க’.. ‘3 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவிக்கும் 2 வயது குழந்தை’ மனதை உருக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jun 10, 2019 01:15 PM
ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவிக்கும் 2 வயது குழந்தை மீட்க 3 நாட்களாக மீட்புப்படையினர் போரடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை எதிர்பாரதவிதமாக அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாய் குழந்தையை மீட்க போராடியுள்ளார். ஆனால் குழந்தை உள்ளே செல்வதை உணர்ந்த குழந்தையின் தாய் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து மீட்புப்படையினருடன் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் ஆழம் சுமார் 150 அடி இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே பள்ளம் தோண்டி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆழ்துளை கிணற்றில் 3 நாட்களாக குழந்தை மயக்க நிலையில் இருப்பதால் தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஆழ்துளை கிணற்றில் சிறியரக கேமராவை செலுத்தி குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குழந்தை மீட்கப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மருத்துவ குழு எப்போதும் தயாராக இருப்பதாக அம்மாநில தெரிவித்துள்ளது. மேலும் தனது மகனுக்கு இன்று பிறந்தநாள் அவன் பத்திரமாக மீண்டுவர அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என குழந்தையின் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.