‘பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை அடித்துக் கொலை.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கொடூரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Behindwoods News Bureau | Jun 09, 2019 01:17 AM

குஜராத்தில் பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தையை கொடூரமாகத் தாக்கிக் கொன்ற ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

20 day old girl baby killed in Gujarat

அகமதாபாத்தின் மேகனிநகரில் பெண் ஒருவர் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளது. தாயையும் குழந்தையையும் தாக்கிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.  படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இது தொடர்பாக அந்தக் குழந்தையின் தாய் அளித்த புகாரின்பேரில் அந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வீடு புகுந்து தாக்கியதற்கான காரணம் தெரியாததால் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #BABY #BEATENTODEATH