'ஹே ஹே.. நம்மள பாக்க ஒரு ஸ்பெஷல் ஃபிரண்ட் வந்தாப்டி'.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 24, 2019 06:04 PM

குழந்தைகளைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது. அந்த குழந்தைகளுடன் உறவாட சில நிபந்தனைகள் உள்ளன.

A special friend came to meet me, Modi viral photo

முதல் நிபந்தனையே, குழந்தையுடன் விளையாடும்போது, குழந்தையை கொஞ்சுபவர் குழந்தையாக வேண்டும் என்பதுதான். எத்தனை வயதுக்காரரையும் குழந்தையாக்கும் குழந்தையின் மகிழ்ச்சியான முகமும், எத்தனை பெரிய பிஸியான, டென்ஷனான மனிதரின் நேரத்தையும் குழந்தையின் மழலை மொழி தனதாக்கிக் கொள்ளும் என்பதும் நிதர்சனம்.

அவ்வகையில் பாஜக எம்.பி சத்யநாராயணன் ஜத்யாவின் பேரக்குழந்தையை பிரதமர் மோடியின் கைகளில் கொடுத்துள்ளார். மோடியும் அந்த குழந்தையை மடியிலும், தனக்கு முன்னால் இருக்கும் டேபிள் மீதும் உட்கார வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி சிரித்து மகிழ்கிறார்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிரதமர் மோடி, அதற்கு கேப்ஷனாக, ‘இன்று பாராளுமன்றத்தில் என்னை ஒரு சிறப்பு நண்பர் சந்திக்க வந்தார்’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

Tags : #NARENDRAMODI #BJP #BABY #VIRAL #INSTAGRAM