‘தொட்டிலில் தூங்கிய குழந்தையை தாய் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற தந்தை’.. வெளியான மிரள வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 20, 2019 02:26 PM

ஜோதிடத்தை நம்பி பெற்ற குழந்தையை தந்தையே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

One month old baby girl was strangled by her father in Karnataka

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் என்னும் மாவட்டத்திலுள்ள புச்சனஹள்ளி என்ற கிராமத்தில் மஞ்சு-சுசித்ரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசித்ரா கர்ப்பம் தரித்துள்ளார். ஜோதிடத்தின் மீதி அதீத நம்பிக்கை கொண்ட சுசித்ராவின் கணவர் மஞ்சு, தங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என அனைவரிடம் கூறிவந்துள்ளார்.

ஆனால் கடந்த மாதம் சுசித்ராவுக்கு நடந்த பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மன உளச்சலுக்கு ஆளான மஞ்சு, குழந்தை பிறந்ததில் இருந்து யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து பிறந்த பெண் குழந்தையால் தனது குடும்பத்துக்கு கெட்டது நடக்கப் போவதாக ஜோதிடர் ஒருவர் மஞ்சுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பிறந்து ஒரு மாதமே ஆன பிஞ்சு குழந்தையை கொல்ல மஞ்சு முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து மஞ்சு கொலை செய்துள்ளார். இதனைப் பார்த்த சுசித்ரா அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டுள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மஞ்சு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள மஞ்சுவை போலிஸார் தேடிவருகின்றனர்.

Tags : #KARNATAKA #BABY #FATHER