‘அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க’... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jul 25, 2019 07:08 PM
தமிழகத்தில் வட மாவட்டங்களில், அடுத்து இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் பல ஊர்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்து இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், தென்மேற்கு பருவமழை இப்போது கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தின் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் சுழற்சி நிலவுவதாக கூறிய அவர், இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.