அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் மனைவி மர்ம மரணம்..! தற்கொலையா..? பெற்றோர் போலீசில் புகார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 08, 2019 12:16 PM

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 year old Hyderabad woman found dead in her US home

ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கஜம் வனிதா (38). இவருடைய கணவர் சிவக்குமார் (40). இவர் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினர் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் கஜம் வனிதா சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார். வனிதா உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மூலமாக அவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மகள் இறந்தது தொடர்பாக வனிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘தன்னுடைய மகள் கடந்த ஜூன் மாதம் அவரது கணவருடன் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. அமெரிக்கா சென்றதில் இருந்து அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவில்லை’ என புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் கணவர், மாமனார், மற்றும் மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தனது மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், வனிதாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே வனிதாவின் கணவரிடம் அமெரிக்க போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #HYDERABAD #WOMAN #DEAD #US #PARENTS #HUSBAND #AMERICA