‘பயங்கர விபத்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Oct 11, 2019 10:23 AM
தாய்லாந்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரக்யா பலிவால் (29). பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த பிரக்யா நிறுவனத்தின் பயிற்சிக் கூட்டத்திற்காக தாய்லாந்து சென்றுள்ளார். இந்தியாவில் இருந்து வேறு சிலரும் அவருடன் சென்றிருந்த நிலையில் அங்கு நடந்த பயங்கர கார் விபத்து ஒன்றில் பிரக்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை உடனடியாக பிரக்யாவின் தோழி அவருடைய குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிரக்யாவின் குடும்பத்தினர் யாருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால் தாய்லாந்து சென்று அவருடைய உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பாங்காங்கில் உள்ள இந்திய தூதரகம் பிரக்யாவின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.