‘பதவியை ராஜினாமா செய்றேன்.. முதல்வர் அதிரடி!’.. ‘கொரோனாவுக்கே டஃப் கொடுக்கும் அரசியல் பரபரப்பு!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 20, 2020 01:05 PM

மத்திய பிரதேச சட்டப் பேரவையில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

I have decided to tender my resignation to the Governor, CM KamalNath

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்ததை அடுத்து அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். இதனையடுத்து சட்டப்பேரவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்றும் காங்கிரஸ் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் பாஜக எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர்.

இதன் பெயரில் மத்தியபிரதேச சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடரை இன்று கூட்ட வேண்டுமென்றும் மாலை 5 மணிக்குள்ளாக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டப்பேரவை இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கூட உள்ளது. இதனிடையே மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், தான் ராஜினாமா செய்வதாகவும்,  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாகவே ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : #KAMALNATH #MADHYAPRADESH