தயவுசெஞ்சு கெளம்புங்க... 10,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்பும் 'பிரபல' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Mar 18, 2020 07:58 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் (வொர்க் ப்ரம் ஹோம்) ஆப்ஷனை வழங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் தங்களது நிறுவனத்துக்காக பயிற்சி பெறும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு இருக்கிறது.

Infosys to send 10,000 trainees back home, Details Listed!

தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மைசூரில் பயிற்சி பெற்று வருகின்ற பயிற்சி ஊழியர்கள் 10,000 ஆயிரம் பேரை இன்போசிஸ் நிறுவனம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறது. இதற்காக கர்நாடக அரசின் கே.எஸ்.ஆர்.டி.சி (கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து அமைப்பு) இன்போசிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ளது. இன்போசிஸ் ஊழியர்கள்

இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய ஐந்து சிறப்பு மையங்களை கே.எஸ்.ஆர்.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் இவர்களை ஏற்றிச் செல்லும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பெங்களூர் விமான நிலையத்துக்கும், மைசூர் ரெயில் நிலையத்துக்கும் கூட இந்த பேருந்துகள் இன்போசிஸ் நிறுவனத்துக்காக இயக்கப்பட இருக்கின்றன. அடுத்த வாரம் வர இந்த செயல்முறை தொடரும் என்று கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 1500 ஊழியர்கள் என்றளவில் அவர்கள் அனைவரும் இடம் பெயர்த்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.