ஆட்டுக்கால் சூப்..சயனைடு..மொத்தம் 6 கொலைகள்..மாநிலத்தை உலுக்கிய பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Oct 05, 2019 05:09 PM
கேரள மாவட்டம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தொரை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ்.இவரது மனைவி அன்னம்மாள்.இருவரும் கல்வித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.இவர்களது மகன் ரோய் தாமஸ்.அன்னம்மாளின் சகோதரர் மேத்யூ,ஜான் தாமஸின் சகோதரன் மருமகள் பீலி,பீலியின் 1 வயது மகன் அல்பன் ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 2002 முதல் 2016 வரை அடுத்தடுத்து மர்மமாக இறந்தனர்.இவர்கள் அனைவரின் சாவும் ஒரே மாதிரியாக இருந்தது.இதனால் உறவினர்கள் இவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை.மேலும் இவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் இவர்களது மரணம் சாதாரணமானது என்றே கூறினர்.
இந்தநிலையில் மீண்டும் உறவினர்கள் இவர்களின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். உறவினர்களின் தொடர் வலியுறுத்தலால் போலீசார் அவர்களது உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி போலீசார் 14 வருடங்களுக்கு பின் அவர்களது உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று 6 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர்.பின்னர் அவற்றில் இருந்த எலும்பு கூடுகள், உடல் பாகங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அவர்களது உடல்களில் விஷம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜான் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களது உறவினரான ஜோலி என்ற பெண் அவர்கள் அனைவருக்கும் ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த பின்பே அவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்துள்ளனர் என்றனர்.
இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி இன்று கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.