மனைவி, 'குழந்தை'யை கொலை செய்ய உதவினேன்.. 6 பேர் கொலையில்.. 2-வது 'கணவர்' வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 08, 2019 10:38 AM

கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் ஜோலியின் 2-வது கணவர் சாஜு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் என மனைவி மற்றும் 2-வது குழந்தை எங்கள் திருமணத்துக்கு இடையூறாக இருந்தது. அதனால் அவர்கள் இருவரையும் கொலை செய்திட நான் உதவினேன். எனது மூத்த மகனையும் கொலை செய்ய ஜோலி நினைத்தார்.ஆனால் அவனை எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நான் தடுத்து விட்டேன். என தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Kerala Cyanide Case: Shaju Confesses he helped Jolly

ஆட்டுக்கால் சூப்..சயனைடு..மொத்தம் 6 கொலைகள்..மாநிலத்தை உலுக்கிய பயங்கரம்! https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/six-unnatural-deaths-in-the-same-family-in-12-years-details.html

முதலில் சாஜு இதனை நேரடியாக கூறவில்லை. ஆனால் போலீசார் விசாரித்த விதத்தில் அவர் உண்மையை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் சில மரணங்கள் இயற்கையானது இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் வெளியில் சொல்ல பயமாக இருந்தது. நான் ஏதாவது கூறினால் ஜோலி என்னையும் கொலை செய்துவிடுவார் என்ற பயம் தான். நானும் அவரை முதலில் என்.ஐ.டி பேராசிரியை என்று தான் நினைத்தேன். என்னை ஜோலி பல தருணங்களில் பயமுறுத்தினார். அவருக்கு இருந்த தொடர்புகள் எனக்கு அச்சத்தை கொடுத்தது. என்னையும் அவள் கொலை செய்துவிடுவாள் பயந்தேன். என விளக்கம் கொடுத்துள்ளார்.

அதிகாரம்,ஆசை,கள்ளத்தொடர்பு.. கணவன் உட்பட 6 பேரைக் கொன்று.. போலீசை மிரளவைத்த பெண்! https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-cyanide-case-housewife-confesses-to-killing-six-in-family.html

இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சயனைடு கொடுத்து உதவி செய்தவர்களுக்கும், ஜோலிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்திட போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.