அதிகாரம்,ஆசை,கள்ளத்தொடர்பு.. கணவன் உட்பட 6 பேரைக் கொன்று.. போலீசை மிரளவைத்த பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 07, 2019 02:03 PM

கேரள மாவட்டம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியை சேர்ந்தவர் டாம் தாமஸ். இவரது மனைவி அன்னம்மாள். இருவரும் கல்வித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் ரோய் தாமஸ். அன்னம்மாளின் சகோதரர் மேத்யூ, ஜான் தாமஸின் சகோதரன் மருமகள் பீலி, பீலியின் 1 வயது மகன் அல்பன் ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

Kerala cyanide case: Housewife confesses to killing six in family

இவர்கள் அனைவரும் கடந்த 2002 முதல் 2016 வரை அடுத்தடுத்து மர்மமாக இறந்தனர்.இவர்கள் அனைவரின் சாவும் ஒரே மாதிரியாக இருந்தது.இதனால் உறவினர்கள் இவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை.மேலும் இவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் இவர்களது மரணம் சாதாரணமானது என்றே கூறினர்.

இந்தநிலையில் மீண்டும் உறவினர்கள் இவர்களின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். உறவினர்களின் தொடர் வலியுறுத்தலால் போலீசார் அவர்களது உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி போலீசார் 14 வருடங்களுக்கு பின் அவர்களது உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று 6 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர்.பின்னர் அவற்றில் இருந்த எலும்பு கூடுகள், உடல் பாகங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அவர்களது உடல்களில் வி‌ஷம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக ஜோலி(47) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தற்போது இந்த வழக்கில் ஏராளமான உண்மைகள் வெளியாகி உள்ளன. அதாவது தாமஸ்-அன்னம்மாள் தம்பதிக்கு ராய் தாமஸ்,ரோஜோ தாமஸ் இரண்டு மகன்கள். இதில் ராய் தாமஸின் மனைவி தான் ஜோலி. வீட்டில் மாமியார் அன்னம்மாள் வைத்தது தான் சட்டம் என்று இருந்துள்ளது.இதனால் மட்டன் சூப்பில் சயனைடு  கலந்து கொடுத்து முதலில் மாமியார் அன்னம்மாளைக் கொன்றுள்ளார். தொடர்ந்து சொத்து தொடர்பான விவகாரத்தில் தனது மாமனாருக்கும் கிழங்கில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொன்றுவிட்டார். இருவரும் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

அப்போது ஜோலி மட்டுமே வீட்டில் இருந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மூத்த உறுப்பினர்கள் இறந்ததால் தனது இஷ்டம் போல இருந்துள்ளார். இதை கணவர் ராய் கண்டித்ததால், அவருக்கும் மட்டன் சூப்பில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். இந்த மரணங்கள் தொடர்பாக அன்னம்மாவின் சகோதரர் மேத்தீவ்க்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதனால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து அவரையும் ஜோலி விஷம் வைத்து கொன்றுள்ளார்.

ஜோலிக்கு நீண்ட நாட்களாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சாஜுவின் மீது ஒரு கண் இருந்துள்ளது. சாஜூ வேறுயாரும் இல்லை ஜோலியின் கணவர் ராய் தாமஸுன் சித்தப்பா மகன் தான். சாஜூ ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது அமைதியான சுபாவம் குறித்து அடிக்கடி புகழ்ந்து பேசிவந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து மர்மமான முறையில் அவரது குழந்தை,மனைவி இருவரும் இறந்து போயுள்ளனர். மகள்-மனைவி இறந்த சோகத்தில் இருந்த சாஜு 1 வருடங்களுக்கு உள்ளாக ஜோலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ரோஜோ கோழிக்கோடு காவல் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு புகார் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் சில நாட்களுக்கு முன் இறந்தவர்களின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் அனைவரின் உடல்களிலும் விஷம் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து ஜோலியை கைதுசெய்த போலீசார் அவருக்கு சயனைடு கொடுத்து உதவி செய்த  மேத்தீவ் மற்றும் பிராஜி குமார் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தனது கொலைகள் அனைத்தையும் ஜோலி ஒப்புக்கொண்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கணவன் உட்பட 5 பேருக்கு மனைவி விஷம் வைத்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.