'என் ஆபீஸ் சேம்பர்லயே பொண்ணுங்களுக்கு இதெல்லாம் நடக்குது.. என்ன பண்லாம்?'..புகார் கொடுத்தவருக்கு ஐஏஎஸ் அதிகாரியின் பரபரப்பு பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 27, 2019 11:15 PM

வட டெல்லியின் நகராட்சி ஆணையர் வர்ஷா ஜோஷி ஐஏஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அலுவலகத்தில் ஆண்களின் அத்துமீறல்கள் இருப்பதாகவும், இவற்றை தானும் தினந்தோறும் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

i face it in my own chamber, varsha Joshi IAS tweet

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தங்களது கிராமப்புற பகுதிகளில் கூட்டமாக சேர்ந்து ஆண்கள் சிலர் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, போதை, புகையிலை வஸ்துக்களுடன் சீட்டாட்டம் ஆடிக்கொண்டு இடையூறாக இருப்பதால் தனியே ஒரு பெண் அந்த பக்கமாக நடந்து செல்வதே தர்ம சங்கடமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபற்றி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, அவர் ட்விட்டரில் வர்ஷா ஜோஷியின் கணக்கில் சென்று முறையிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள வர்ஷா ஜோஷி, ‘போலீஸாருக்கு இது மற்றும் ஒரு பிரச்சனையாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் பெரும்பாலான வட இந்திய பெண்களுக்கு இது நாள் முழுவதும், வாரம் ஏழுநாளும் சந்திக்க வேண்டிய பிரச்சனையாக உள்ளது. இவ்வளவு ஏன்? என்னுடைய அலுவலகத்திலேயே நான் தினமும் இதனை முகத்துக்கு நேரே சந்திக்கிறேன். ஆண்களின் அத்துமீறல்களும், வரம்பு மீறல்களும் என்னுடைய அலுவலகத்தில் எல்லை மீறிதான் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான தீர்வுதான் என்ன?’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : #HARASSMENT