இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 14, 2019 11:23 AM
1. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக பேசிய சீமான், “ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்” என சர்ச்சைக்குரிய வகையில் கூறியதைத் தொடர்ந்து அவரை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டுமென காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜீவ் காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெற மாட்டேன் என சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
2. நாமக்கல்லில் தனியார் நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை 72 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளது. நீட் மைய சோதனையில் 30 கோடி ரூபாய் பணமும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
3. சிரியாவின் எல்லைப்பகுதியில் குர்து இன போராளிகளின் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றுள்ளனர்.
4. பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ மீதான தவறான பிம்பத்தை மாற்றுவதற்கு தனக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
5. இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, எஸ்தர் ட்யூப்லோ, மைக்கேல் க்ரிமர் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
6. புதுச்சேரி அருகே உள்ள நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் கிராம மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
7. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முடுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8. தமிழகத்தில் இன்று முதல் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
9. 9. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு கொள்ளையனை மதுரையில் கைது செய்துள்ள போலீஸார் அவரிடமிருந்து 6 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதாகியுள்ள சுரேஷை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
10. குஜராத் மாநிலத்திலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் தேர்வுத்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் எனக் கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
11. தேனி அருகே உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகியுள்ளன.
12. கூட்ட நெரிசலைத் தவிர்க்க தீபாவளி பண்டிகைக்கு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
13. ஆடம் ஹாரி (20) என்வருக்கு 23.34 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து திருவனந்தபுரத்திலுள்ள ராஜீவ் காந்தி அகாடமி ஃபார் ஏவியேஷனில் சேர உதவி இந்தியாவின் முதல் திருநம்பி விமான ஓட்டியை உருவாக்கியுள்ளது கேரள அரசு.