'சாதி மாறி கல்யாணம்’... ‘ஒரே நாள்தான்’... ‘கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Oct 14, 2019 06:16 PM

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்த கல்லூரி மாணவி, ஒரே நாளில் மர்மமான முறையில், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 yo Minor girl found dead, honour killing alleged in AP

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் ரெட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனா (17). இவர் அதே ஊரைச் சேர்ந்த நந்தகுமார்(19) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும், குப்பத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் ஒன்றாக படித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதல், வீட்டிற்கு தெரிந்ததால், சந்தனாவின் பெற்றோர், இருவரையும் கண்டித்துள்ளனர். இதன்பின்னர் சந்தானாவை கடந்த 2 மாதங்களாக கல்லூரிக்கு அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, நண்பர்கள் உதவியுடன், வீட்டைவிட்டு வெளியேறி, காதலர்கள் இருவரும், கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனை அறிந்த சந்தனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை அன்று, அவர்கள் தங்கியிருந்த இடத்தை கண்டுப்பிடித்து சென்றனர். இருவரின் பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஊர் பெரியோர், பெண்ணிற்கு திருமண வயது வந்தப்பிறகு பேசிக்கொள்ளலாம் என சமாதானம் பேசி, சந்தனா மற்றும் நந்தகுமாரை அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், வீட்டிற்கு திரும்பிய உடனேயே, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி, அவசர அவரசரமாக தங்களது விவசாய நிலத்தில், சந்தனாவின் உடலை எரித்து, பெற்றோர் இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர், அவரது உடலின் சாம்பல் மற்றும் எலும்புத்துண்டுகளை அங்குள்ள ஆற்றில் தூக்கியெறிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், சந்தனாவை, பெற்றோர்தான் கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, திருமணம் செய்ததால், ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில், விசாரித்து வருகின்றனர்.  மேலும் சந்தனாவை கொன்றவர்கள், தன்னையும் கொல்லக்கூடும் என்று கூறி, தலைமறைவாக உள்ள நந்தகுமார்  மற்றும் அவரது தந்தையையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #SUICIDE #SUSPICIOUS #MURDERED