‘இந்தியாவிலேயே முதல்முறையாக’.. ‘தனியார் நிகழ்ச்சிகளுக்கு’.. ‘வாடகைக்கு விடப்படும் ரயில் நிலையம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 14, 2019 05:28 PM
கொச்சி ஹார்பர் டெர்மினல்ஸ் ரயில் நிலையம் தனியார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சி ஹார்பர் டெர்மினல்ஸ் ரயில் நிலையம் திருமண போட்டோ ஷூட், பிறந்த நாள் விழா போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. முதல் நிகழ்ச்சியாக இந்திய ஃபைவ் ஸ்டார், செவன் ஸ்டார் ஹோட்டல்களின் மேலாளர்கள் மாநாடு அங்கு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
புதர் மண்டிக் கிடந்த ரயில் நிலையத்தை பராமரிக்கும் விதமாகவும், வருமானம் ஏற்படுத்தும் விதமாகவும் ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கேரள ஹைகோர்ட்டுக்குப் பின்னால் உள்ள பழைய ரயில்வே ஸ்டேஷனும் வாடகைக்கு விடப்பட உள்ளது.
Tags : #KERALA #COCHIN #INDIANRAILWAYS #TRAIN #STATION #FUNCTIONS #RENT #BIRTHDAY #WEDDING #PHOTOSHOOT
