'அவர்கூட' என்ன பேச்சு?... கண்டித்த பேராசிரியர்... 'மனமுடைந்து' கல்லூரி மாணவி எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 06, 2020 05:57 PM

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

College Student Suicide Attempt in Puducherry, Details

புதுச்சேரி மாநிலம் லால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி(18). தந்தையை இழந்த இவரை இவர் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த பிரீத்தி அங்கு ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது கல்லூரி பேராசிரியர் பிரீத்தியை கண்டித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் அங்கிருந்து கல்லூரியின் முதல் மாடிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட, இதைப்பார்த்த சக மாணவிகள் அலறியுள்ளனர்.

இதையடுத்து தலையில் பலத்த காயத்துடன் இருந்த பிரீத்தியை மீட்டு புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.