‘மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்’.. ‘3 மகன்களையும்’.. ‘காவலர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 02, 2019 08:19 PM

குஜராத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் தனது மகன்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

Gujarat Police constable slits throat of his 3 sons

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுக்தேவ் சியால் என்பவர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சுக்தேவிற்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் தனது மகன்களான குசால் (9), உத்தவ் (5), மன்மீட் (3) ஆகிய 3 பேரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு சென்ற சுக்தேவ் அங்கு நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் தனது மகன்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GUJARAT #POLICE #CONSTABLE #FATHER #SONS #BRUTAL #MURDER