‘காக்னிசென்ட்டில்’... ‘இளம் பட்டதாரிகளுக்கு அடித்த யோகம்’... 'சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்த முடிவு'!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Feb 10, 2020 08:29 PM

பிரபல ஐ.டி. (IT) நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம், (Cognizant)  இந்த ஆண்டு அதிகளவில் பொறியியல் பட்டதாரிகளை இந்தியாவில் இருந்து வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

Cognizant to Hire More Students Via CI Hikes Salaries

டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதால்,  அவற்றை ஈடுகட்டும் வகையில் வழக்கத்தை விட 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை தனது நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப் போவதாக  காக்னிசென்ட் தெரிவித்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் மாணவர்கள் டிஜிட்டல் திறன்களை அதிகளவில் கொண்டுள்ளதாக, காக்னிசென்ட் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் வழக்கத்தைவிட அதிகளவில் அதாவது 20,000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பணிக்கு அமர்த்த காக்னிசென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகும் பொறியியல் பட்டதாரி மாணவர்களின் சம்பளத்தை 18 சதவிகிதம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வருடாந்திர சம்பளம் 4 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட உள்ளது. அதிலும் கடந்த  ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில், காக்னிசென்ட்டில் இருந்து, 10,000 - 12,000 ஊழியர்களை நீக்கியுள்ள நிலையில், புதிதாக இளம் பொறியாளர்களை நியமிக்க உள்ளதாக காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸ் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஐ.டி. துறையில் (IT) அதிக அளவில் ஊழியர்களை நியமித்த வகையில், 2 லட்சம் பணியாளர்களுடன் காக்னிசென்ட் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், 4 புள்ளி 4 லட்சம் பணியாளர்களுடன் டிசிஎஸ் (TCS) முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #STUDENTS #COGNIZANT #CAMPUS INTERVIEW #SALARIES